Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th October 2023 22:08:59 Hours

141வது காலாட் பிரிகேடினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவு

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 141 வது காலாட் பிரிகேடின் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் வத்தளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உடுகம்பிட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 குடும்பங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 06) மதிய உணவு வழங்கப்பட்டது. .

8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணின் கட்டளை அதிகாரி மேஜர் வை.டி.என்டி சில்வா மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணின் சிப்பாகள் கெரவலப்பிட்டி விஜய குமாரதுங்க விளையாட்டரங்கில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள மேற்படி குடும்பங்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடுகளை செய்தனர்.

141 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் மேறகொள்ளப்பட்டது.