09th October 2023 21:50:34 Hours
கம்பஹா பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 141 வது காலாட் பிரிகேடின், 15 வது பிரிவின் படையினர் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 6) கணேமுல்ல, ஹொரகொல்ல வடக்கு கிராம சேவையாளர் பிரிவின் வீடொன்றின் மீது விழுந்திருந்த மரங்களை அகற்றினர்.
பலத்த காற்று காரணமாக வீடுகளை அன்டிய ஆபத்தான மரங்கள் வீடுகளை சேதமடையச் செய்யும் என அஞ்சிய பிரதேசவாசிகள் அருகில் உள்ள பிரதேச செயலகத்திற்கு முறைப்பாடு செய்ததனை அடுத்து அவர்கள் மரங்களைஅகற்றுவதற்கு இராணுவத்தின் உதவியை நாடியுள்ளனர்.
மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வி யுஎஸ்பீ என்டியூ மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச். பண்டாரநாயக்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.ஜி.பி. காரியவசம் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் 15வது பிரிவின் கட்டளை அதிகாரிய ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பணி இரண்டு மணி நேரத்தில் முடிக்கப்பட்டது.