22nd December 2024 10:08:23 Hours
141 வது காலாட் பிரிகேட் 19 டிசம்பர் 2024 அன்று வெயங்கொடையில் உள்ள பிரிகேட் விரிவுரை மண்டபத்தில் கல்வி விரிவுரையை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வு இராணுவ தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சேவை பணிப்பக வழிகாட்டுதலின் கீழும், 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.ஆர் டி எஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழும் நடைபெற்றது.
இலங்கையில் ஆபத்தான போதைப்பொருள் பாவனை தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து படையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த விரிவுரை இடம்பெற்றது.
தேசிய அபாயகரமான மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபையின் (பொது பாதுகாப்பு அமைச்சு) ஊடகப் பேச்சாளரும் கல்வி/தகவல் அதிகாரியுமான திரு. ஐ.எம்.சி.பீ கருணாரத்ன மற்றும் ஆலோசனை உளவியலாளரான திருமதி. எஸ். நில்மினி அபேசேகர உட்பட இரண்டு புகழ்பெற்ற நிபுணர்கள் இந்த அமர்வை நடத்தினர்.
அமர்வில் 14 அதிகாரிகள் மற்றும் 142 சிப்பாய்கள் கலந்து கொண்டனர். விரிவுரையில் கேள்வி, பதில் முறை விரிவுரையினை அர்த்தமுள்ள விடயங்களை குறித்து கலந்துரையாட ஊக்குவித்ததுடன் பங்கேற்பாளர்கள் கேள்விகளைக் கேட்கவும், அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது.