03rd October 2023 20:46:59 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 ஆவது காலாட் படைப்பிரிவின் 141வது காலாட் பிரிகேட்டின் 6வது இலங்கை பீரங்கிப் படையணி படையினர் யக்கல பீட்டர் வீரசேகர சிறுவர் இல்ல 33 சிறுவர்களுக்கான விசேட பொழுதுபோக்கு நிகழ்ச்சியை சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (1 அக்டோபர்) ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் தேநீர் விருந்து, சிறப்பு மதிய உணவு, இசை பொழுதுபோக்கு மற்றும் அவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 141 வது காலாட் பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.டி ரத்னசிறி, 6 வது இராணுவ பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜி.ஆர்.ஆர்.கே.எஸ் ஜயரத்ன ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேற்கு பாதுகாப்புப் படைத் தளபதி மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தையும் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 141 வது காலாட் பிரிகேட் தளபதி இந்த ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கினிகம கிராம உத்தியோகத்தர் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்துகொண்டனர்.