Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2022 21:29:12 Hours

141 வது காலாட் பிரிகேடின் ஒருங்கிணைப்பில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைபிரிவின் 141 வது காலாட் பிரிகேட்டின் முன் முயற்சியால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவியின் அனுசரனையில் தொம்பே குருவெல ஆரம்ப பாடசாலையின் 38 மாணவர்களைக் கொண்ட ஒரு குழுவிற்கு அத்தியவசிய பாடசாலை உபகரணங்கள் 19 டிசம்பர் 2022 நன்கொடையாக வழங்கப்பட்டது.

இன் நன்கொடையானது ரூ. 250,000/- பொறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் அத்தியவசியப் பொருட்கள் ஒவ்வொன்றும் பயிற்சி புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள், கணித உபகரண பெட்டிகள், பாடசாலை பைகள், எழுதுபொருட்கள் ஆகியவை ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ரொஷான் சிவா மற்றும் அவரது துணைவியார் ஆகியோரால் 141 வது காலாட் பிரிகேட் வேண்டுகோளின் பேரில் நன்கொடையை வழங்கினர், குறித்த மாணவர்கள் மிக கஷ்டங்களுக்கு மத்தியில் பாடசாலை உபகரணங்களை வாங்க முடியாத நிலையினை கருத்திற் கொண்டு இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைபிரிவின் மேற்பார்வையின் கீழ் 141 வது காலாட் பிரிகேடின் 8 வது இலங்கை இலேசாயு காலாட் படையணியின் படையினரால் குருவெல ஆரம்ப பாடசாலையில் 38 பாடசாலை மாணவர்களுக்கு குறித்த நன்கொடை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் 141 வது காலாட் பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, 8 வது இலங்கை இலோசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரி, அனுசரணையாளர்கள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துக்கொண்டனர்.