Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2023 18:44:00 Hours

14 வது 'வெற்றி தினத்தில்' பத்தரமுல்லை நினைவுத்தூபியில் வீரமிக்க போர்வீரர்களுக்கு நினைவு அஞ்சலி!

எல்ரீரீஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தலின் போது இந்நுயிரை நீத்த 28,619 போர்வீரர்களின் வீரத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் 'வெற்றி நாள்' என்றழைக்கப்படும் தேசிய போர்வீரர் தினத்தின் 14 வது ஆண்டு நினைவு தினம் இன்று (மே 19) பிற்பகல் சமயம் நிகழ்வுகளுக்கு மத்தியில் கௌரவமாக நினைவு கூறப்பட்டது. முப்படைகளின் சேனாதிபதி கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இவ்விழாவின் போது, இரக்கமற்றவர்களுக்கெதிராகப் போராடி உயிர் தியாகம் செய்த இராணுவத்தின் (23,962), கடற்படை (1,160), விமானப்படை (443), பொலிஸ் (2,598) மற்றும் 456 சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பணியாளர்களின் நேசத்துக்குரிய கடமைகள் நினைவு கூறப்பட்டது. 2009 மே மாதத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கெதிரான அவர்களின் வீரம், தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற தியாகங்கள் ஆகியவற்றிற்காக மரியாதையுடன் நினைவு கூரப்பட்டனர்.

மதகுருமார்கள், உயிரிழந்த போர்வீரர்களின் மணைவிமார்கள் / உறவினர்கள், கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன, கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி பணிக்குழு பிரதானி மற்றும் சிரேஷ்ட ஆலோசகர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி எம்பில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி, பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர், முப்படை போர் வீரர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் ஒன்றிணைந்து அந்த துணிச்சலானவர்களை நினைவு கூர்ந்தனர்.

ரணவிரு சேவை அதிகார சபையால் இந்த வருடமும் ஏற்பாடு செய்யப்பட்ட 14 வது தேசிய போர்வீரர் தின நினைவேந்தல் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமானது. முப்படைகளின் சேனாதிபதி கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்ததுடன், அதற்கு முன்னதாக கௌரவ பிரதமர் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் வருகை தந்தனர்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், வீரத்திற்கான செய்தி வாசிப்பு, மத அனுஷ்டானங்கள், 'ரண பெர'(மேளம்) இசைத்தல், விழிப்பு உணர்வு, நினைவுச் சின்னத்தின் மீது வான்வழி மலர்கள் தூவுதல் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்ட இந்த புனிதமான விழாவில், முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களின் துணிச்சலையும் நினைவுகூரப்பட்டது.

அன்றைய நிகழ்வின் உச்சக்கட்டமாக நினைவுச் சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்துவதில் மாண்புமிகு கொளரவ ஜனாதிபதி அவர்கள், ஏனைய அழைப்பாளர்கள், உயிர்நீத்தவர்களின் உறவினர்களும் இணைந்து கொண்டனர்.

இராணுவ மரபுகளுக்கு இறுதி வாசிப்பு மற்றும் ரீவில்லி ஒலியுடன் விழா நிறைவுக்கு வந்தது.