02nd February 2023 19:39:14 Hours
பாணந்துறை கங்குல ஸ்ரீ ஞான விமல தம்ம பாடசாலையில் இருந்து இலங்கை இராணுவத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் 14 வது காலாட்படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் ஜயமான்ன அவர்கள் பிரதம அதிதியாக கடந்த 2023 பெப்ரவரி 19 ஆம் திகதி இப்பாடசாலையில் இடம்பெற்ற மாணவ தலைவர்களுக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாணந்துறை கங்குல ஸ்ரீ ஞான விமல தம்ம பாடசாலையின் 60 மாணவ தலைவர்களும் சுமார் 110 வகுப்பு தலைவர்களும் தங்களின் சின்னங்களை பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் மேஜர் ஜெனரல் ரொஷான் ஜயமான்ன தலைமைத்துவம் மற்றும் எதிர்கால சவால்கள் தொடர்பாக உரையாற்றினார். வருகை தந்த தளபதி அவர்களை பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.மகா சங்க உறுப்பினர்கள்,ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பணியாளர்கள் பாடசாலை ஆசியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.