10th May 2024 16:07:57 Hours
படையினருக்கான நலன்புரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் சலவை வசதியினை திறந்துவைக்கும் நிகழ்வு 14 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் 2024 மே 07 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வு 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் ஆசிர்வாதத்துடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.