18th June 2023 15:43:06 Hours
64 வது காலாட் படைப்பிரிவின் 641 வது காலாட் பிரிகேடின் 14 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மற்றொரு சமூகம் சார் திட்டமாக திங்கட்கிழமை (ஜூன் 12) பாண்டரவன்னி பாலர் பாடசாலை வளாகத்தில் சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர்.
14 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பிஎச்ஜிபீ குணவர்தன அவர்களின் மேற்பார்வையின் கீழ் அதிகாரியொருவருடன் 15 சிப்பாய்கள் இணைந்து 'டெங்கு' பெருகக் கூடிய வகையில் கழிவுகள் நிறைந்திருந்ததால் இத் திட்டத்தை மேற்கொண்டனர்.
64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எசச்டிடபிள்யூகேஎன் எரியாகம ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ மற்றும் 641 வது காலாட் பிரிகேடின் தளபதி பிரிகேடியர் டபிள்யுஎல் கொலன்ன யூஎஸ்பீ ஆகியோர் திட்டத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.