Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th June 2023 20:16:15 Hours

14 மற்றும் 61 வது காலாட் படைப்பிரிவுகளின் ‘பொசன்’ நிகழ்வுகள் 2023

'பொசன்' பண்டிகையை முன்னிட்டு மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவுகள், பல சமய நிகழ்வுகளை முன்னெடுத்தனர்.

அதன்படி, கோட்டை ரஜமஹா விகாரையின் விகாராதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க புதன்கிழமை (மே 31) 144 வது காலாட் பிரிகேட்டின் படையினர் ஒன்றிணைந்து கோட்டை ரஜமகா விகாரையின் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்ததோடு, விகாரை வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வளர்ந்திருந்த பற்றைகளை வெட்டி சுத்தப்படுத்தினர்.

இதேவேளை, சனிக்கிழமை (ஜூன் 03) களனிமுல்ல சதஹம் சிசில பௌத்த நிலைய வளாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு படையினர் குழுவொன்றும் தமது ஒத்துழைப்பை வழங்கினர்.

அதேவேளை, 61 வது காலாட் படைப்பிரிவின் 613 வது காலாட் பிரிகேட்டின் 3 (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினர் சனிக்கிழமை (ஜூன் 03) ‘பரேவிதுவ’ எனப்படும் மாத்தறை ரந்துபத ‘உபோஷதகர’ ரஜமஹா விகாரையில் தூபி அமைப்பதற்கு தமது உதவிகளை வழங்கினர்.

இத்திட்டத்தின் போது, அப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் இணைந்து விகாரையின் தூபியை நிர்மாணிப்பதற்கு தேவையான மணல், செங்கல், சிமெண்ட் போன்ற மூலப்பொருட்களை படையினர் மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.

கொழும்பு லும்பினி வித்தியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொசன் வலய தொனிப்பொருளான “பன்சில் ராகினலும்பினியாக்” நிகழ்ச்சியை சனிக்கிழமை (ஜூன் 03) பாடசாலை வளாகத்தில் நடாத்துவதற்கு 14 வது காலாட் படைப்பிரிவு படையினர் தமது உதவிகளை வழங்கினர். ‘பொசன்’ வலயத்தில் தானம் மற்றும் பலவிதமான அழகிய ‘பொசன்’ கூடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்து. அதே கொழும்பு லும்பினி வித்தியாலயத்தின் பழைய மாணவராக இருந்த மறைந்த லெப்டினன் கேணல் லலித் ஜயசிங்க உட்பட, வீரமரணம் அடைந்த போர்வீரர்களுக்கான பாராட்டுக்களும், அங்கவீனமுற்ற வீரர்களுக்கான ஆசிகளும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

புத்தளம் பிரதேசத்தில் பொசன் நிகழ்வுடன், 143 வது காலாட் பிரிகேட் தலைமையகம், 16 வது கஜபா படையணி மற்றும் 14 வது காலாட் படையணியின் 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் இணைந்து சனிக்கிழமை (ஜூன் 03) புத்தளம் செல்லகந்தவத்தை, 143 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தில் அன்னதானம் வழங்கினர்.

‘பொசன்’ பண்டிகையின் போது புத்தளம் பிரதேசத்தின் 3000 இற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கான உணவிணை தயார் செய்வதற்கு படையினர் தமது நேரத்தையும் வளங்களையும் வழங்கினர்.

மேலும், 142 வது காலாட் பிரிகேட்டின் 15 வது ட்ரோன் பீரங்கி படையணியினர் 2023 ஜூன் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் ‘பொசன்’ விழாவுடன் தொடர் நிகழ்வுகளை நடாத்தினர். ‘சீலசமாதி’ திட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி மாலையில் ‘போதி பூஜை மற்றும் சொற்பொழிவு’ இடம்பெற்றது. பின்னர், பிரதான நுழைவாயிலுக்கு அருகில் மிஹிந்தலையின் மாதிரி ஒன்று சம்பிரதாயபூர்வமாக ஒளியேற்றப்பட்டது. அதேநேரம், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 04) அதிகாலை பக்தர்களுக்காக பனாலுவ முகாமின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக பலாக்காய் தானம் ஒன்றையும் படையினர் வழங்கினர்.

மேலும், அந்தந்த படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ‘பொசன்’ பண்டிகைக்கான இராணுவத்தின் பங்களிப்பை உன்னிப்பாகக் கண்காணித்து தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினர்.