12th April 2023 06:09:48 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 613 வது காலாட் பிரிகேடின் 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணியில் சேவையாற்றும் படையினர் குழுவொன்று 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் திகதி காலி உனவடுன கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. அதேபோன்று, 613 காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் இத்திட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.
இந்த சமூக திட்டத்தில் மொத்தம் 40 இராணுவ வீரர்கள் தீவிரமாக பங்கேற்றினர்.