09th December 2024 19:27:40 Hours
மேஜர் ஜெனரல் கேஜேஎன்எம்பீகே நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 14 வது காலாட் படைப்பிரிவின் 12 வது தளபதியாக 2024 டிசம்பர் 6 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த அவர் 14 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.