காலி கோட்டையில் அமைந்துள்ள 14 வது(தொ) கெமுனு ஹேவா படையினர், காலி மாநகர சபை மற்றும் கடவத் சத்தர பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து ஜனவரி 18 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்கதும் மிகவும் கவர்ச்சிகரமானதுமான காலி கோட்டைக்குள் சிரமான பணிகளை மேற்கொண்டனர்.
காலி கோட்டைக்குள் நிறுவப்பட்டுள்ள 14 வது(தொ) கெமுனு ஹேவா படையினரின் வெள்ளி வருட பூர்த்தியையொட்டி இந்த சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 61 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தோட்ட மற்றும் 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு, 14 வது(தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் இப்பணியை மேற்கொள்வதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினர்.