Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th October 2022 13:10:51 Hours

14 மற்றும் 61 வது படைப்பிரிவினரால் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் தேசிய டெங்கு தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணையாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 மற்றும் 61 வதுபடைப்பிரிவுகளின் கீழ் சேவையாற்றும் படையினர் 2022 ஒக்டோபர் 03 முதல் 05 ஆம் திகதி வரை மேற்கு பாதுகாப்பு படைத்தலைமையக பொறுப்பு பகுதியில் உள்ள 17 பிரதேச சுகாதார நிலையங்கள் உட்பட ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உதவினர்.

இந்த நிகழ்ச்சித் திட்டமானது நடவடிக்கைகள் பணிப்பகத்தின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மற்றும் 14 மற்றும் 61 வது படைப்பிரிவுகளின் தளபதிகளின் நெருக்கமான மேற்பார்வையுடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது சுகாதார ஊழியர்கள் , படையினர் வீடுகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மத ஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை பரிசோதனை செய்தனர்.

14 மற்றும் 61 வது காலாட்படையணி பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 60 இராணுவ வீரர்கள், வைத்திய அதிகாரிகள், அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பல அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.