04th April 2025 14:55:07 Hours
இலங்கை இராணுவ தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது பாதுகாப்பு சேவைகள் வீதி ஓட்ட போட்டி - 2024/2025, இலங்கை இராணுவ தடகள குழு தலைவர் மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ பீஎஸ்சீ எச்டிஎம்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், பனாகொடை இராணுவ முகாமில் 2025 மார்ச் 23, அன்று நிறைவடைந்தது.
இப் போட்டியில் இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களின் சிறந்த சாதனைகளுக்காக பதக்கங்களைப் பெற்றனர்:
வீதி போட்டி நிகழ்வு
•தங்கப் பதக்கம் (ஆண்கள் பிரிவு) - இலங்கை பீரங்கி படையணியின் சிப்பாய் எம்ஏஎஸ் பெர்னாண்டோ
•தங்கப் பதக்கம் (பெண்கள் பிரிவு) - இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்எம்சீஎஸ் ஹேராத்
நடைப் போட்டி
•தங்கப் பதக்கம் (ஆண்கள் பிரிவு) - இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்எம்எஸ்ஆர் ஹேராத்
•தங்கப் பதக்கம் (பெண்கள் பிரிவு) - இலங்கை இராணுவ மகளிர் படையணியின் மகளிர் சிப்பாய் பீபி கயானி