Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st October 2024 10:53:38 Hours

13வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியில் கயிறு இழுத்தலில் இலங்கை இராணுவம் வெற்றி

2024 செப்டெம்பர் 27 அன்று பூனேவ இலங்கை கடற்படை தளத்தில் நடைபெற்ற 13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியில் கயிறு இழுத்தல் போட்டியில் இலங்கை இராணுவம் சம்பியன்ஷிப்பை வென்றது.

ஆண்களுக்கான 640 கிலோ எடைப் பிரிவில், இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படையை வீழ்த்தி இராணுவ வீரர்கள் வெற்றி பெற்றனர். இதேவேளை, மகளிருக்கான 560 கிலோ எடைப்பிரிவில் இராணுவ வீராங்கனைகள் விமானப்படை வீராங்கனைகளை தோற்கடித்து சம்பியன்ஷிப்பை தனதாக்கிகொண்டனர். இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் இரு இராணுவ அணிகளும் சிறப்பாக போட்டியிட்டன.