19th December 2021 13:35:32 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் 13 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் அதன் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய செவ்வாய்கிழமை (15) கொண்டாடப்பட்டது.
அதற்கமைய படைப்பிரிவினருக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள், மேலும் 3 பிரிகேட்கள் மற்றும் படையலகுகள் இணைந்து பொதுமக்களுக்கு 125 மதிய உணவுப் பொதிகளை விநியோகித்ததோடு, அதிரதன் பாலர் பாடசாலை குழந்தைகளுக்கு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.
65 வது படைப்பிரிவு 2008 டிசெம்பர் 15 ஆம் திகதியின் 5 வது செயல் படையாக மாற்றியமைக்கப்பட்டு மல்லாவியில் நிறுவப்பட்டது. அதனையடுத்து துணுக்காயில் மீள நிறுவப்பட்டு பின்னர், 14 ஜனவரி 2009 அன்று மீண்டும் 65 வது படைப்பிரிவாக மீள கட்டமைக்கப்பட்டது. 04 டிசம்பர் 2020 முதல் இப்படைப்பிரிவு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.