Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th April 2021 16:40:11 Hours

13 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

13 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர் மற்றும் அப்படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜிஎஸ்எல் துஷாரா ஆகியோரின் இணை முயற்சியினூடாக புதன்கிழமை (14) முத்துஐயன்கட்டு குளம் பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 13 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் இரண்டாவது கட்டளை அதிகாரி ,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் பங்கேற்றனர்.