22nd April 2025 19:53:59 Hours
12வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் 2025 ஏப்ரல் 21 ம் திகதியன்று மட் /ககு பெரியவட்டுவான் கண்ணகி ஆரம்ப பாடசாலையில் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டம் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. மேலும் இத் திட்டத்தின் போது 25 பிள்ளைகளுக்கு தலா ரூ. 4000.00 பெறுமதியான பாடசாலை உபகரண பொதிகள் வழங்கப்பட்டன.
அதே நேரத்தில், 232 வது காலாட் பிரிகேட் தளபதி புதிதாக நிறுவப்பட்ட பாடசாலையின் நீர் விநியோக அமைப்பைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, பாடசாலையின் பிள்ளைகள் மற்றும் ஊழியர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
இந்த முயற்சிக்கான நிதி உதவியை எட்வர்ட் எண்ட் கிறிஸ்டி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திருமதி முகமது சித்திக் பாத்திமா நிரோஷா வழங்கினார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், நன்கொடையாளர்கள் மற்றும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.