19th November 2021 16:19:15 Hours
ருஹுணு மகா கதிர்காமம் தேவாலய பஸ்நாயக்க நிலமே அவர்களின் நிதியுதவியுடன் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 121 வது பிரிகேட் படையினர் மொனராகலை வெல்லஸ்ஸ கிராமசேவை பிரிவில் வசிக்கும் திரு வை.எம். ஜயரத்னவிற்கு நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை. திங்கட்கிழமை (15) சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி உரிமையாளரிடம் வீடு கையளிக்கப்பட்டது.
121 வது பிரிகேட் தலைமையகத்தின் சமூகநல திட்டமாக திரு Y.M ஜயரத்ன என்ற வறிய குடும்பத்தைச் சேர்ந்தவருக்கான வீட்டினை நிர்மாணிப்பதற்கான மனிதவளம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை 121 வது பிரிகேட் படையினர் வழங்கினர்.
அனுசரணையாளர் ருஹுணு மகா கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திரு.தில்ஷான் குணசேகர, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க, 121 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் டி.யு.என்.சேரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர் மேலும் பயனாளி குடும்ப உறவினர்கள் முன்னிலையில் பயனாளிக்கு புதிய வீட்டின் சாவியை பிரதம அதிதி வழங்கினார்.