13th July 2021 22:50:03 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 12 பிரிவின் இராணுவ புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய , 121வது பிரிகேட் படையினர் மற்றும் குடா ஓயா பொலிஸார் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமை (11) கொட்டியகந்துர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கையை அழித்தனர்.
2 ஏக்கர் பரப்பளவில் புதர்களுக்கு மத்தியில் பயிரிடப்பட்ட இந்த சட்டவிரோத கஞ்சா செய்கைக்குள் 10,000 செடிகள் காணப்பட்டதுடன் வனப் பகுதிகளுக்குள் மறைமுகமான முறையில் பயிரிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் குடா ஓயா பொலிஸார் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க மற்றும் 121 வது பிரிகேட் தளபதி கேணல் உதய சேரசிங்க ஆகியோர் வழங்கிய வழிகாட்டுதலின் கீழ் படையினரால் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.