07th June 2023 19:49:51 Hours
12 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் சாம்பியன்ஷிப் - 2023 இல், இலங்கை இராணுவ நீச்சல் வீரர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்தி 19 நிகழ்வுகளில் 18 தங்கப் பதக்கங்களை வென்றனர்.
ஜூன் 5 முதல் 6 வரை வெலிசர கடற்படை நீச்சல் தடாகத்தில் முப்படைகளில் ஏராளமான வீர / வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில், இராணுவ நீச்சல் வீரர்கள் 19 போட்டிகளில் 18 தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இறுதிப் போட்டியில் கடற்படை மற்றும் விமானப் படையின் நீச்சல் வீரர்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.
இதேபோல், இராணுவ மகளிர் நீச்சல் வீராங்கனைகள் 4 தங்கம், 1 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை வென்று இறுதிப் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்தனர். இதன்படி, இப்போட்டியில் இராணுவத்தின் வீர / வீராங்கனைகள் 22 தங்கப் பதக்கங்களை வென்றனர்.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் (ஆண்கள் பிரிவில்), இராணுவ நீச்சல் வீரர்கள் 18 தங்கம், 14 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றனர், கடற்படை 01 தங்கம், 05 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களை வென்றது. விமானப்படை நீச்சல் வீரர்கள் 01 வெள்ளி மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தனர்.
முழுப் போட்டியிலும் சிறந்த நீச்சல் வீரராக இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் பிடி செஹான் தெரிவு செய்யப்பட்டார்.
இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவப் போட்டியாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல், எண்ணங்களை வழங்கினார்.
இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் உப தலைவர் மேஜர் ஜெனரல் ஏசிஏ த சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் நிகழ்வுகளை பார்வையிட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
முழு பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு நிகழ்வின் முடிவில் சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்பட உள்ளது.