25th June 2024 07:57:49 Hours
சித்துல்பளுவ ரஜமகா விகாரையின் பிரதம தேரரின் வேண்டுகோளின் பேரில் 12 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிக்காட்டலின் கீழ் பொறியியல் சேவைகள் படையணி படையினர் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.
காட்டு யானைகளினால் சேதாமாக்கப்பட்ட 24 மலசலக் கூடங்கள் படையினரால் திருத்தப்பட்டன. இத்திட்டமானது பொசன் போய தினத்தில் விகாரைக்கு வரும் சுமார் 200,000 பக்தர்களுக்கு வசதியளிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.