12th May 2023 18:45:46 Hours
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டீசீ அவர்களின் தலைமையில், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவின் படையினருக்கு, ஹம்பாந்தோட்டை சிங்கப்பூர் - இலங்கை நட்புறவு மண்டபத்தில் புதன்கிழமை (10) 'பூகம்பம் பற்றிய செயலமர்வு நடாத்தப்பட்டது.
அனரத்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ அவர்கள் இந்த அமர்வில் பயிற்றுனர்களை வழிநடத்தினார். மேலும் எம்எஸ் அனோஜா செனவிரத்ன அவர்கள் அனர்த்த மீட்பு, ஆராய்ச்சி மற்றும், ‘பூகம்ப அனர்த்த முகாமைத்துவம்’ குறித்து விரிவாக விளக்கினார்.
இறுதியாக, அவசரகால செயற்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூஎல்ஏசி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, அவர்கள் ‘பூகம்ப சூழ்நிலையில் தேடுதல், மீட்புக் குழுக்கள் மற்றும் இராணுவத்தின் பணிகள்’ என்ற தலைப்பில் விரிவுரையை நடாத்தினார். 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 121 மற்றும் 122 வது பிரிகேட் தளபதிகள், பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் 40 அதிகாரிகள், 640 சிப்பாய்கள், மற்றும் இச் செயலமர்வில் பங்கேற்றினர்.