15th June 2024 09:05:35 Hours
12 வது காலாட் படைபிரிவின் படையினர் 10 ஜூன் 2024 அன்று அம்பலாந்தோட்டை குடபோலன பஞ்சசீஹ பாடசாலையில் முறிந்து விழும் தருவாயில் காணப்பட்ட ஆபத்தான மரத்தை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
இப் பணியானது 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சீஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
படையினரின் உடனடி மற்றும் திறமையான நடவடிக்கையில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு 750 மாணவர்களுக்கான பாடசாலை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க உதவியாக அமைந்தது.