08th January 2024 17:57:27 Hours
தேசிய டெங்கு தடுப்பு பிரச்சாரத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் 12 வது காலாட் படைப்பிரிவின் கீழ் சேவையாற்றும் படையினர் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 07) ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு திட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த திட்டம் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலையில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பகுதிகளை உள்ளடக்கியது. சமூக திட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள 187 இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு நுளம்புகள் பெருகும் வீடுகளை ஆய்வு செய்துடன் மற்றும் பொதுசுகாதாரபரிசோதகர்கள் பொதுமக்களுக்கு அறிவூட்டினர். மேலும், பாடசாலைகள் பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தி, நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்தனர்.
மேலும், இந்த சமூகத் திட்டத்தில் இராணுவத்தின் ஈடுபாட்டினை 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் அந்த படைப்பிரிவின் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது.