Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st July 2024 19:19:21 Hours

12 வது காலாட் படைப்பிரிவினால் பாதயாத்திரை பக்தர்களுக்கு உதவி

மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 12 வது காலாட் படைப்பிரிவு 30 ஜூன் 2024 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் வரையான வருடாந்த பாதயாத்திரை பக்தர்களுக்கு ஆதரவை வழங்கியது.

கும்பக்கன் ஓயாவிலிருந்து கடகமுவ வரையிலான பாதையில் யாத்திரிகர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நிர்வாக உதவி, மருத்துவ உதவி, குடிநீர் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளை வழங்குவதன் மூலம் படையினர் உதவிகளை வழங்கினர்.

படையினரின் உதவியில் 30 ஜூன் 2024 அன்று யால தேசிய பூங்காவிற்குள் உள்ள லின் துனா பகுதியில் குளிர் பானமும் 2024 ஜூலை 02 முதல் 2024 ஜூலை 16 வரை கடகமுவவில் தானமும் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது.