08th May 2024 05:41:30 Hours
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சிஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் திஸ்ஸமஹாராம ரண்மினிதென்ன கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 120 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நலன்புரி செயற்திட்டம் 12 வது காலாட் படைப்பிரிவினரால் 2024 மே 02 ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய,12 காலாட் படைப்பிரிவு, அபயபுர சுரனிமல ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 60 மாணவர்களுக்கு பாடசாலை காலணிகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர். மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி இத்திட்டத்திற்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
ஹொங் கொங்கில் வசிக்கும் அருட் தந்தை ஒஸ்மான் டி அல்விஸ் தலைமையிலான அனுசரனையாளர் குழு இரண்டு திட்டங்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கினர்.
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்கள் பிரதம அதிதியாக அருட் தந்தை ஒஸ்மான் டி அல்விஸ் அவர்களுடன் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அனுசரணையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.