10th January 2025 16:45:55 Hours
12 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.ஏ.கே குணரத்ன யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பாடசாலை உபகரணங்கள் நன்கொடை வழங்கும் நிகழ்வு 2025 ஜனவரி 4, அன்று ஹம்பாந்தோட்டை கிரிந்தகம ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.
இந்த முயற்சியினால் 50 மாணவர்கள் பயனடைந்ததுடன் அவர்களுக்கு அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நன்கொடை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சிரேஷ்ட துணை வேந்தர் பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி திரு. நிராஜ் முத்துக்குட, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இன் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.எல்.டி.என். குணசேகர (ஓய்வு) மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. தனுஷி குணசேகர ஆகியோரின் நிதி பங்களிப்புகள் மூலம் சாத்தியமானது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.