Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th May 2023 22:36:28 Hours

12 வது இலங்கை சிங்க படையணி படையினர் வெள்ளத்தில் சிக்கிய பிள்ளை மீட்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைபிரிவின் 613 வது காலாட் பிரிகேட்டின் 12 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் மாத்தறை மாவட்ட செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க செவ்வாய்க்கிழமை (16) காலை வெல்லத்தோட்டையில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் வெளியேற முடியாமல் வீட்டில் சிக்கியிருந்த 3 வயது சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டது.

மாத்தறை நில்வலா ஆற்றில் சில தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததையடுத்து, வலிப்பு நோய் மற்றும் கடும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் தவித்ததை படையினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து படையினர் இதற்கான தீவிர முயற்சியை மேற் கொண்டனர்.

அதற்கமைய படகு மூலம் 12 வது வது இலங்கை சிங்க படையணியின் படையினர் குழு உடனடியாக அவர்களின் வீட்டிற்குச் சென்று, அவர்களை வெளியேற்றி, நோய்வாய்ப்பட்ட சிறுமியை உடனடியாக மாத்தறை பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுடன் அவசர மருத்துவ சிகிச்சையின் பின்னர், நோய்வாய்ப்பட்ட பிள்ளை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இத் திட்டம் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் ஆசிர்வாதத்துடன் 61 காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 613 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின்படி 12 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் என்பீஎஸ் ஜயசேகர அவர்களின் தலைமையில் மீட்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.