Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2021 06:28:39 Hours

12 வது படைப்பிரிவு படையினர் உலர் உணவு பொதிகளுடன் தேவையுடையோரை அனுகல்

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12வது படைப்பிரிவின் ஹம்பாந்தோட்டை பொதுப் பகுதியில் திங்கட்கிழமை (31) தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை விநியோகிப்பதை ஒருங்கிணைத்தது.

'செகண்ட் கொப்பி' இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தினால் அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் மா, கறுவாடு, உப்பு, தேயிலை, வெங்காயம் போன்றவற்றை உள்ளடக்கிய பொதிகளை அப்பகுதியின் 35 ஏழை குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

12 வது படைப்பிரிவின் கர்ணல் பொதுப் பணி பிரிகேடியர் எஸ். பி. விதானகமகே, 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்காவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நன்கொடை ஒருங்கிணைத்தார்.