Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th January 2022 09:01:07 Hours

12 வது படைப்பிரிவு படையினரால் அளுத்வெலயில் கஞ்சா செய்கை முற்றுகை

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் மூலம் அளுத்வெல பகுதியில் உள்ள கஞ்சா செய்கையை சனிக்கிழமை (02) சுற்றிவளைத்தபோது அதில் 30,000 கஞ்சா கன்றுகள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

12 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவின் பணிப்புரையின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் 121 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உதய சேரசிங்கவின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 20 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் அவர்களின் கட்டளை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சோதனையை நடத்தினர்.

இந்தச் சுற்றிவளைப்பு தொடர்பில் குடா ஓயா பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.