Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th August 2022 20:07:53 Hours

12 வது படைப்பிரிவு, அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு இரண்டாம் தொகுதி மருத்துவ உதவிப் பொருட்கள் வழங்கல்

12 வது படைப்பிரிவின் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கை சமூகம், 2,14,000/= மதிப்புள்ள அவசரமாக தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை (மெரோபெனெம் மற்றும் செப்ட்ரியாஸோன்) அம்பாந்தோட்டை அரச வைத்தியசாலைக்கு திங்கட்கிழமை (1) இரண்டாம் தொகுதியை நன்கொடையாக வழங்கினர்.

12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்கள் சார்பாக கேணல் ஒருங்கிணைப்பு அவர்கள் அம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுரங்க உபேசேகர அவர்களிடம் மருத்துவப் பொருட்களை கையளித்தார்.

மெரோபெனெம் என்பது மூளைக்காய்ச்சல், உள்-வயிற்று தொற்றுகள், நிமோனியா, செப்சிஸ் மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற பல்வேறு பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் நரம்பு வழி நோயெதிர்ப்பு ஊசி மருந்தாகும் என்பதோடு செப்டிறியாசோன் என்பதும் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் நோயெதிர்ப்பு ஊசி மருந்தாகும்.

ஹம்பாந்தோட்டையில் உள்ள மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக அந்த துணைக்கருவிகள் அவசரமாக தேவைப்பட்டன. அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸை வசிப்பிடமாக கொண்ட நன்கொடையாளர்கள் மிகக் குறுகிய அறிவிப்பில் 12 வது படைப்பிரிவின் தளபதியின் வேண்டுகோளின் பேரில் இந்த உதவியை வழங்க முன்வந்தனர்.

12 வது படைப்பிரிவில் உள்ள பொதுப் பணி அதிகாரி 1 (நடவடிக்கைகள்) மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர்கள் அன்றைய தினம் பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.