Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd June 2021 12:20:22 Hours

12 வது படைப்பிரிவினரால் மெதகம தீப்பரவல் அனைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 121 பிரிகேட் மற்றும் 18 வது கெமுனு ஹேவா படையினரால் ஞாயிற்றுக்கிழமை (20) மெதகம – கிரிவபத்துவ வனப் பகுதியில் உள்ள தெலிவகந்தை மலைத்தொடரில் ஏற்பட்ட காட்டுத்தீப் பரவல் சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த படையினர் ஒட்டுமொத்த வனப்பகுத்திக்குள்ளும் தீப்பரவல் ஏற்படும் முன்பாக கூட்டாக இணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

121 பிரிகேட் தளபதி பிரிகேடியர் உதய சேரசிங்க அவர்களின் மேற்பார்வையிலும் 12 படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக அவர்களின் ஏற்பாட்டிலும் தீயனைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.