20th October 2023 08:05:38 Hours
இலங்கை சிங்க படையணியின் 8 வது கட்டமான ‘ரணவிரு வீடமைப்புத் திட்டம்’ சில மாதங்களுக்கு முன்னர் நரம்பியல் சிக்கலினால் திடீரென காலமான சிங்க படையணியின் சார்ஜன் ஒருவரின் குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்து அன்பளிப்பாக வழங்கினர்.
12 வது இலங்கை சிங்க படையணியுடன் இணைந்து தமது தோழர் மறைந்த சார்ஜன் ஏ.எம் செனவிரத்ன பண்டா அவர்ளின் நினைவை போற்றும் வகையில் சனிக்கிழமை (14 ஓக்டோபர் 2023) இலங்கை சிங்க படையணியின் படையினரின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு அவரது துணைவி மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு ரிக்கில்லகஸ்கடவில் நடந்த நிகழ்வில் முறைப்படி வழங்கினர்.
இந்த நிகழ்வில் இராணுவத் தலைமையகத்தின் உபகரண பணிப்பாளர் நாயகமும் சிங்க படையணியின் படைத் தளபதியுமான ஜி.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன, இலங்கை சிங்க படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தன, இலங்கை சிங்க படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் சி.எஸ் திப்பொடுகே மற்றும் 12 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்.சீ.எஸ் ஜயசேகர, இலங்கை சிங்க படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.
மூன்று படுக்கையறைகள், ஒரு சாப்பாட்டு அறை, ஒரு சமையலறை மற்றும் குளியலறையுடன் கூடிய புதிய வீடு, 12 வது இலங்கை சிங்க படையணியின் தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த படையினரால் கட்டப்பட்டது.
மேஜர் ஜெனரல் ஜி.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன மற்றும் இலங்கை சிங்க படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தன ஆகியோரின் வழிகாட்டுதலால் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் நிதி மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்களை வழங்கி இத் திட்டத்திற்கு ஆதரவளித்தனர்.
மேலும், பிரிகேடியர் சி.எஸ்.திப்பொடுகே மற்றும் லெப்டினன் கேணல் எம்.சி.எஸ் ஜயசேகர ஆகியோரும் நிர்மாணத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்து பல வழிகளில் உதவிகளை வழங்கினர்.