07th October 2024 17:03:01 Hours
12 வது கெமுனு ஹேவா படையணி படையினர் அலவகும்புரவில் வசிக்கும் வசதியற்ற குடும்பம் ஒன்றிற்கான புதிய வீட்டை நிர்மாணித்ததோடு, 2024 ஒக்டோபர் 04 ஆம் திகதி வீடு திறக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் வீடு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அரலகங்வில மக்கள் வங்கி கிளையின் நிதியுதவியில் 12 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இந்த நிர்மாண பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகளின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.