Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th July 2024 14:26:43 Hours

12 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

12 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் பொருளாதார சிரமங்களுக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 19 ஜூலை 2024 அன்று அரலகங்வில மகாவெலி பிரதிபா கேட்போர் கூடத்தில் பாடசாலை உபகரணங்ளை விநியோகித்தனர்.

இந் நிகழ்வின் போது 165 மாணவர்கள் புத்தக பொதிகளை பெற்றுக்கொண்டனர். அதற்கமைய விநியோகத்திற்கு மேலதிகமாக, இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்கே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு கலாநிதி சஞ்சீவ ராஜபக்ஷ, திரு.ஜாலிய போதின்னாகொட, திரு.ஹிரந்த சில்வா மற்றும் திரு.விபுல பெரேரா ஆகியோர் அனுசரணை வழங்கினர்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.