Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd April 2024 13:53:04 Hours

12 வது காலாட் படைப்பிரிவு, ‘ஹோப் போ லைப் லங்கா’ நிறுவனத்துடன் இணைந்து பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

12 வது காலாட் படைப்பிரிவு ஹோப் போ லைப் லங்கா நிறுவனத்துடன் இணைந்து, மொனராகலை முனசிங்க ஆரம்ப பாடசாலையின் 30 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள், பாடசாலை சீருடைகளுக்கான தையல் செலவுகள் மற்றும் விளையாட்டு பொருட்களை 2024 ஏப்ரல் 06 ஆம் திகதி வழங்கியது.

அதே வேளை, 121 வது காலாட் பிரிகேடில் சேவையாற்றும் 15 சிவில் ஊழியர்கள் மற்றும் 30 குடும்பங்களின் பிள்ளைகளுக்கு தலா ரூபா 6500.00 பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் வழங்கியதுடன், அதே நிறுவனத்தின் அனுசரணையில் பிள்ளைகள் மற்றும் பயனாளிகளுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

12 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சீ.எஸ்முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி அவர்களுடன் 'ஹோப் போ லைப் லங்கா' நிறுவனத்தின் தலைவர் திரு. காமினி பரனகே ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது 121 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.