06th April 2025 16:32:27 Hours
12 வது காலாட் படைப்பிரிவு தனது 14 வது ஆண்டு நிறைவை படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ எஸ் என் ஹேமரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 மார்ச் 30 முதல் ஏப்ரல் 04 வரை தொடர் நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
படைப்பிரிவின் தளபதி சவால் கிண்ண கிரிக்கெட், கரப்பந்தாட்டம் மற்றும் பூப்பந்து, போட்டிகளுடன் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின. மார்ச் 30 அன்று கஞ்சதேவ சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 24 விசேட தேவையுடைய சிறார்கள் ரிதியகம திறந்த சுற்றுலா மிருகக்காட்சிசாலையை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர்.
மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய திகதிகளில், படைப்பிரிவில் பிரித் பாராயணம் மற்றும் 14 பௌத்த பிக்குகளுக்கு தானம் வழங்கலும் இடம்பெற்றது. ஏப்ரல் 01 அன்று கிரிவெஹெர மற்றும் கதிர்காம விகாரையில் படைப்பிரிவு மற்றும் அமைப்புக்களின் கொடிகளும் ஆசீர்வதிக்கப்பட்டன.
ஆண்டு நிறைவு நாளான ஏப்ரல் 02 ம் திகதி, 18 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் படைப்பிரிவு தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தளபதி அனைத்து படையினருக்கும் உரையாற்றினார். ஏப்ரல் 04 ம் திகதி மாலை இசை நிகழ்ச்சியுடன் ஆண்டு நிறைவு விழா நிறைவடைந்தது.