09th August 2023 18:07:04 Hours
மேஜர் ஜெனரல் சீஎஸ் முனசிங்க டபிள்யுடபிள்யுவி ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜி அவர்கள் ஹம்பாந்தோட்டை 12 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக ஓகஸ்ட் 4 கடமைகளை பொறுப்பேற்றார்.
12 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் வழங்கப்பட்ட பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதையை பரிசீலனை செய்த பின்னர், புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியை 12 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி கேணல் எல்ஆர் விஜேரத்ன யுஎஸ்பீ அவர்கள் முகாம் வளாகத்திற்கு மரியாதையுடன் வரவேற்றார். பின்னர், புதிய தளபதி தனது கையொப்பத்தை ஒரு முறையான ஆவணத்தில் இட்டு, மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய நியமனத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, இராணுவ சம்பிரதாயமாக, அவர் அனைத்து நிலையினருடனான தேநீர் உபசாரத்தில் கலந்து கொண்டதுடன், படையினருக்கு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், படைப்பிரிவு தலைமையக பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர்.