Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th April 2024 17:28:04 Hours

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அபிமன்சல - II போர் வீரர்களுடன் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சி.எஸ்.முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் புதன்கிழமை (ஏப்ரல் 10) கம்புருப்பிட்டி "அபிமன்சல - II" இன் போர் வீரர்களை பார்வையிட்டதுடன் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து நலவிடுத்திக்கு சென்று சிகிச்சை பெற்றுவரும் போர் வீரர்களின் நலம் விசாரித்ததுடன், 13 போர்வீரர்கள் மற்றும் 11 உதவியாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் சின்னமாக சிறப்பு பரிசுப் பொதிகளை வழங்கினர்.

மேலும் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்றுக் கொண்டார். இவ் வளாகம் போரில் கடினமாக போரிட்ட வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேநீர் விருந்தின் போது படைப்பிரிவின் தளபதி போர் வீரர்களுடன் உரையாடினர். அவர் விடைப் பெற்றுசெல்லும் முன் விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் குழுவும் இந்த விஜயத்துடன் இணைந்திருந்தது.