Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th February 2024 12:12:27 Hours

12 வது காலாட் படைப்பிரிவினால் வறிய குடும்பத்திற்கு புதிய வீடு

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2024 பெப்ரவரி 24 ம் திகதி செல்ல கதிர்காமத்தில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றிற்காக புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் பணியை ஆரம்பித்தனர்.

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சீஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் ருஹுணு கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே ஆகியோர் இந்த திட்டத்திற்கான ஆரம்பத்தை குறிக்கும் வகையில் அடிக்கல் நாட்டினார். ஆறு பிள்ளைகள் மற்றும் அவர்களின் ஊனமுற்ற தந்தையை உள்ளடக்கிய குடும்பத்திற்கு போதுமான தங்குமிடம் வசதி இல்லை என்பதை கருத்திற்கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ருஹுணு கதிர்காமம் கோவிலின் பஸ்நாயக்க நிலமே திரு.திஷான் குணசேகர ஆகியோரின் ஒருங்கிணைப்பின் மூலம் திரு.ஹிரோஷ் ஜயதிலக்க இந்த திட்டத்திற்கான நிதியுதவியை வழங்கினார். 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் கட்டுமானத்தை செயல்படுத்த தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனித வளத்தை வழங்குவர்.

இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.