Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd November 2024 07:58:07 Hours

12 வது காலாட் படைப்பிரிவினால் மகா ஆரா கனிஷ்ட வித்தியாலயத்திற்கு நன்கொடை வழங்கல்

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீகேடப்ளியூடப்ளியூஎம்ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 20 நவம்பர் 2024 அன்று அம்பலாந்தோட்டையில் உள்ள மகா ஆரா கனிஷ்ட வித்தியாலயத்தில் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், 338 மாணவர்களுக்கு பாடசாலை பைகள், புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு சிற்றுண்டிப் பொதிகளும் வழங்கப்பட்டன. அக்சஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் இன் துணை நிறுவனமான சதோச மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிதியுதவி வழங்கப்பட்டதுடன் விளையாட்டுப் பொருட்களை "மனுசத் தெரண" வழங்கியது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.