25th November 2024 22:47:59 Hours
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீகேடப்ளியூடப்ளியூஎம்ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலுக்கமைய 21 நவம்பர் 2024 அன்று சூரியவெவ, அகுனகொலவெவ வித்தியாலயத்தில் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 48 மாணவர்களுக்கு தலா ரூபா 3500 பெறுமதியான பாடசாலை பைகள், பயிற்சி புத்தகங்கள் மற்றும் காலணிகள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன. இந்த முயற்சிக்கு அக்சஸ் இன்ஜினியரிங் (பிரைவேட்) லிமிடெட் இன் துணை நிறுவனமான சதோச மோட்டார்ஸ் லிமிடெட் நிதியுதவி அளித்தது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.