29th May 2024 13:33:48 Hours
ஹம்பாந்தோட்டை உடமுல்ல மகா வித்தியாலயத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புத்தர் சந்நிதி நிர்மாணப் பணிகளை 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சிஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 23 மே 2024 அன்று புதிதாக கட்டப்பட்ட சந்நிதியில் புத்தரின் புதிய சிலையை வைத்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிர்மாணப் பணியானது 12 வது காலாட் படைப்பிரிவின் படையினரின் அர்ப்பணிப்பு முயற்சியின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந் நிகழ்வில் உபகரண பணிப்பாளர் நாயகமும் இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டிபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.