Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

112 ஆவது படையினரால் மீட்பு பணிகள்

பதுள்ளை – பிபில்ல பாதையில் 200 அடி செங்குத்துப்பாதை பள்ளத்தில் பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பசறை 13 ஆம் மைல் வது மைல் கல்லுக்கு விரைந்து சென்ற 11 வது படைப்பிரிவின் 112 வது பிரிகேட் படையினர் பொது மக்களுடன் இணைந்து தற்போது இன்று காலை (20) மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 7.00 மணியளவில் பதுல்லையிலிருந்து புறப்பட்டு சென்ற பேருந்து காலை 7.30 மணியளவில் விபத்து நடந்த இடத்தை அடைந்து கட்டுப்பாட்டை இழந்து செங்குத்துப்பாதை பள்ளத்தில் விழுந்ததில் 14 பேர் உயிரிழந்ததுடன் மற்றும் 45 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில், 112 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திசானாயக அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய படையினர் உடனடியாக செயற்பட்டு பயணிகளின் உடல்களை மீட்பதிலும், அதிகமாக விபத்துக்குள்ளாகி பேருந்தின் கீழ் சிக்கியவர்களை மீட்பதிலும் மும்முரமாக இருந்தனர். இந்த நடவடிக்கையில் இராணுவக் மருத்துவ குழுவினர்களும் உதவியாளர்களும் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

பொலிஸாரின் தகவல்களுக்கு அமைவாக காயமடைந்த 45 பேர் சிகிச்சைகளுக்காக பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கபட்டுள்ளனர்.மேலும் அவர்களில் சிலரின் நிலமை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

112 வது பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் அனுர திஸாநாயக்க கறித்த இடத்திலிருந்து மீட்பு பணிகளை மேற்பார்வை செய்தார்.