Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2023 19:30:20 Hours

111 வது காலாட் பிரிகேட் படையினர் விகாரை நலத்திட்டங்களுக்கு உதவி

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைப்பிரிவின் 111 வது காலாட் பிரிகேடின் 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைவீரர்கள் அம்பிட்டிய, வேலுவன ஆரண்யசேனாசனாயவில் 100 மூங்கில் கன்றுகளை திங்கட்கிழமை (27) விகாரை வளாகத்தில் நடும் பணியில் ஈடுபட்டனர்.

5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 25 இராணுவ வீரர்கள் குழு விகாரையின் பிக்குகளுடன் கலந்தாலோசித்து அந்த மரக்கன்றுகளை நட்டு சில மணிநேரங்களில் திட்டத்தை நிறைவு செய்தனர்.

இதேவேளை கண்டி, கட்டுகஸ்தோட்டை தர்மபால விகாரையின் புனரமைப்புக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு செல்லும் திட்டத்தை 11 வது காலாட் படைப்பிரிவின் 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி வெள்ளிக்கிழமை (24) முன்னெடுத்தது.