Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2021 20:15:39 Hours

111 வது பிரிகேட் படையினர் முதியோர் இல்லம் சுத்தம்

சிவில் இராணுவ ஒத்துழைப்பின் ஒரு திட்டமாக, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 111 வது பிரிகேட் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை (31) கம்பளையில் உள்ள ‘பிஹிம்பியஹேன முதியோர் இல்லத்தை’ சுத்தம் செய்தனர்.

சுத்தப்படுத்தும் இத்திட்டத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர், இது இராணுவத்தின் மனிதாபிமான அம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் இத்தகைய உதவி முன்னெடுக்கப்பட்டது.

111 வது பிரிகேட் சிப்பாய்கள் மற்றும் 111 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரியும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.