Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2020 13:00:30 Hours

111 வது பிரிகேட்டின் புதிய தளபதி கடமைகளைத் தொடங்குகிறார்

111 வது பிரிகேட்டின் புதிய தளபதியாக கர்ணல் ரோஹித ரத்நாயக்க தொழுவ கம்பொளை தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை (15) பொறுப்பேற்றார், 11 வது படைப்பிரிவின் 111 வது பிரிகேட்டின் புதிய தளபதியை பணி நிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதுடன் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படை படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் கர்ணல் ரோஹித ரத்நாயக்க சில சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் தனது கடமைகளை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இந்த புதிய நியமனத்திற்கு முன்பு கர்ணல் ரோஹித ரத்நாயக்க 511 வது பிரிகேட்டின் தளபதியாக பணியாற்றினார்.

அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்து, மரக்கன்று நடல், படையினருக்கான உரை என்பன அன்றைய இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் கட்டளை அதிகாரிகள் மற்றும் பிரிகேட் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பிரிகேடியர் நலின் பண்டார நாயக்க போயகணை விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் நிமித்தம் கர்ணல் ரோஹித ரத்நாயக்க இப்பதவிக்கு நியமிக்கபட்டார். buy shoes | Sneakers