Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2023 18:00:57 Hours

11 வது விஐயபாகு காலாட் படையினரால் அக்கரை கரையோரப் பகுதி சுத்தம்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் 521 வது காலாட் பிரிகேட்டின் 11 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ட் 06) அக்கரை கடற்கரையோரம் சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இத் திட்டம் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ என்டியூ மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யாகம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய மேற் கொள்ளப்பட்டது.

திட்டத்தின் போது, பங்கேற்பாளர்கள் அனைவரும் அயராது உழைத்து, கடற்கரை ஓரங்களில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் ஏனைய மாசுகளை அகற்றி சுத்தம் செய்தனர். 521 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 11 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் இந்த சமூக திட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.